Skip to main content

Kolamavu Kokila





The first time we see Kokila (Nayanthara), the protagonist of Kolamavu Kokila, we see her asking superior about her raise. But he indicates that she should give him a different kind of raise so that he can take her case with the general manager. Her retort is one worthy of a mass hero, and it works mainly because it is Nayanthara who is delivering this line. It is the Lady Superstar’s ‘Unmaya sonnen’ (Baashha) moment.

The film is an out-and-out star vehicle that keeps giving its star whistle-worthy moments. And most remarkably, it manages to stay true to its genre – black comedy – and ensures that the script comes before the star.

Kokila’s family is your ordinary lower middle-class family. Her father (RS Sivaji) is a security guard, who considers even let his daughter discuss personal matters at his workplace – the ATM. Her sister is a college-goer while her mother (Saranya Ponvannan), a strong-willed, practical housewife, is the one who runs the show in this house. But when they learn that she has lung cancer, they are crushed. Worse, they will need at least ₹15 lakh for her treatment.

There is a subtle women empowerment message in this set-up. When her mother is resigned to her fate, Kokila asks her if she has chosen to be so because she is a daughter. And this provides her with the impetus to ensure that she earns the money required for the treatment. In fact, it is the women who call the shots in the film. When a murder has to be committed to save themselves, it is Kokila’s mother and sister who step up to the task even as her father turns into a wimp. Even Guru (Saravanan), the cop who is after them, is controlled by his wife.

But Nelson doesn’t make Kokila get into the drug-peddling business immediately after her initial encounter with drug peddlers. She goes through various channels seeking help, and none get her any further. We even see her meeting a rich man, who wants her to be his paramour. Thus, we never question her decision; in fact, it only makes us empathise with her decision wholeheartedly.

He populates this world with colourful characters, like an underling who gets too emotional, roadside Romeos (Yogi Babu is in form here) who is a subtle dig at the stalker-ish heroes of Tamil cinema, a drug dealer who likes to use cringe-worthy metaphors, and so on.

The film turns even more darkly comic in the second half once this family of simpletons also is forced to get into the ‘business’. It is all very hilarious and quite enjoyable, however, after a point, we begin to feel that the plot is running around in circles. Plus, we never get any indication of the cunning Kokila displays. She even does away with the men who she sees as a threat. We get she is ‘breaking bad’, but to this extent is something that the film never convincingly answers.

But the filmmaking is top notch, and displays an eye for tasteful aesthetics – shabby-chic settings, Sivakumar Vijaya’s gorgeously back-lit frames, coordinated costumes, even one-eyed tears… The use of songs recalls the approach of Vignesh ShivN – they take the narrative further even as they help maintain the playful tone of the film,and ensure that things never turn too dark.



                   வயதான அப்பா ஏடிஎம் காவலாளி, அம்மா கேன்சர் பேஷண்ட், தங்கை காலேஜ் ஸ்டூடன்ட்.... இவர்களை வறுமை வாட்டி வதைக்க ., வேலை பார்க்க போகும் இடங்களில் எல்லாம் கோகிலா - நயன்தாராவை பலரும் ஒரு பக்கம் காதலிப்பதாகவும், மற்றொரு பக்கம் மேற்படி., மேட்டருக்கு அழைத்தும் படுத்தி எடுக்க ., கோகிலா - நயன்தாரா, "கோல மாவு" கோகிலா ஆகிறார். அதாகப்பட்டது , அம்மாவின் வைத்திய செலவுக்காக கொக்கைன் போதைபவுடர் கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் இறங்குகிறார் நயன். அதில் காசு பணம் சேர்த்து அம்மாவையும் , குடும்பத்தையும் கேன்சரில் இருந்து மீட்டாரா ? அல்லது , போலீஸில் சிக்கி சிறைக்கு சென்றாரா ..? என்பது தான் "கோலமாவு கோகிலா " படத்தின் மொத்த கதையும், களமும். 

 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க ., "லைக்கா புரொடக்‌ஷன்ஸ்" தயாரிப்பில் அனிருத் இசையில் , நெல்சனின் எழுத்து , இயக்கத்தில் வித்தியாசமும், விறுவிறுப்புமாக காட்சிப்படுத்தப்பட்டு வெளிவந்திருக்கும் "கோலமாவு கோகிலா " படத்தில்., கோலமாவு என்பதற்கான அர்த்தம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் . இறுதியில் நயன் ., குடும்பத்தோடு கோலமாவு வியாபாரியாக மாறும் லாவகமும் காட் சிப்படுத்தப் பட்டிருக்கும் விதம் ரசனை. 

"கோல மாவு" கோகிலாவாக நயன்தாரா, காட்சிக்கு காட்சி , பவுடர் கடத்தும் பாப்பாவாக பக்காவாக நடித்து பலே , பலே சொல்ல வைக்கிறார். 

அதிலும் , தன்னை படுக்கைக்கு அழைக்கும் மேலதிகாரியிடம் ., ஆரம்பத்தில் பயந்த சுபாவம் உடைய பெண்ணாக காட்சி தரும் நான், வேலை செய்யும் இடத்தில் ., "அப்படி வெளியில மீட் பண்ணனும்னா ., நான் ஏன் சார் உங்கள மீட் பண்ணப் போறேன். ஸ்டெயிட்டா ஜி. எம்மையே பார்த்து உங்க வேலையையே காலி பண்ணி , நானும் , உயர்ந்துட மாட்டேனா ?" எனக் கேட்கும் இடத்தில் தொடங்கி .,முன்னுக்கு வந்துட்டா., யாரையும் விட்டு வைக்காது பழிவாங்குவதில் தொடர்ந்து க்ளைமாக்ஸில் குடும்ப சகிதமாக எதிராளிகளை கொன்று தீர்த்து விட்டு ., போலீஸ் சரவணனிடம் "பெரிய திருடனை எல்லாம் பிடிக்கிறீங்கன்னா நீங்க எவ்வளவு பெரிய திருடனா இருக்கணும்னு எகத்தாளம் பேசுவது வரை எக்குதப்பாக மிரட்டியிருக்கிறார். வாவ்! 

 நயன்தாராவை ஒன்சைடாக லவ் பண்ணும் மளிகைக்கடை ஓனராக யோகி பாபு அசத்தல். நயனிடம் ., உன் வீட்டுக்கு எதிரே "சேகர் ஸ்டோர்ஸ் இருக்கே , அந்த சேகரே நான் தான்... "என தன் லவ்வை கெத்தாக வெளிப்படுத்தி , க்ளைமாக்ஸுக்கு முன் ., நயனை போதை டான்கள் பலரும் ரேப் பண்ணுவதாக நினைத்து ., "டேய் உள்ள வந்து ஒரு ஒரமா உட்கார்ந்துக் கறேன்டா" என கதறுவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.

யோகி பாபு , மாதிரியே "நான் கடவுள்" ராஜேந்திரன், பேச்சுக்கு பேச்சு தன் கட்டைக் குரலை வைத்துக் கொண்டு பழமொழி பலபேசி பண்ணும் அலப்பறை தியேட்டரில் கரகோஷம் காதை பிளக்கிறது. அதிலும் ., "நாளைக்கு மட்டும் சரக்கு அங்கு வரலை நீ பாய் அல்ல ... கேர்ள் ... " எனும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது. 

"ப்ரோ , அவங்க ரேப் பண்ணது உங்க காதலிய மட்டும் தான் ... உங்க காதல இல்ல ... அதனால நீங்க காதல கண்ட்னி யூ பன்ணலாம் ப்ரோ " என்றும் , "ப்ரோ” குடும்பமா கொலை பண்ணிட்டு வந்துருக்காங்க ப்ரோ ..." என்று பதறும் இடங்களிலும் நயனின் தங்கை ஷோபியின் காதலரான புதுமுக இளைஞர் எதிர் பார்ப்பை கூட்டுகிறார். 

நயன்தாராவின் பேஷண்ட் தாயாக சரண்யா பொன்வண்ணன் , அப்பா "அபூர்வ சகோதரர்கள் " சிவாஜி, போலீஸ் இன்ஸ்' , "பருத்தி வீரன் " சரவணன் , அவரது மனைவி நிஷா அடியாள் தீப்பெட்டி கணேஷ்... மும்பை பாய் , தங்கை ஷோபி , ஷோபியின் ஆர்வ கோளாறு லவ்வர் .... உள்ளிட்ட இணை, துணை பிற நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 

ஏ. அமரனின் கலை இயக்கம் கலக்கல் இயக்கம் ., ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு , பக்கா தொகுப்பு. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கன கச்சிதமாக படமாகியுள்ளன. நயன் உள்ளிட்டவர்களுக்கு அனுவர்த்தனின் உடை அலங்காரம் செம கச்சிதம். 

அனிருத் இசையில் "எனக்கு இப்போ கல்யாண வயசுதான் உன்னால சிக்குறேன் தன்னால சொக்குறேன் .. ", "காயம் வருதே சாபம் தருதே ... எதுவழியோ ,எதுவரையோ ......" , " வலி தாங்கல ... அதனால வேற வழித் தெரியலை ...." "நெஞ்சே ... " உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர். 

நயன்தாராவும், கதாநாயகர் என்று யாருமே இல்லாத குறை தெரியாத மொத்தபடமும் பெரும் பலம். 

 தன் அம்மாவின் உயிரை காப்பாற்ற பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கதாநாயகி விற்க துணிவதும் , அதற்கு தடையாக வருபவர்களை தீர்த்து கட்டுவதும் லாஜிக்காக இடிப்பது சற்றே பலவீனம். 

 நெல்சன் தனது ., எழுத்து , இயக்கத்தில் , பிரபல பெரிய நாயகர்கள் நடிக்க வேண்டிய சாகசங்கள் நிரம்பிய ரோலில்., நயன்தாராவை தைரியமாக நடிக்க வைத்திருப்பதும் , அதில் இயக்குனர் எதிர் பார்த்ததிற்கும் மேல் நயன், நடித்திருப்பதும் மீண்டும் மீண்டும் சபாஷ் சொல்ல வைக்கிறது . 

மற்றபடி '., "எவ்வளவு இறங்கி பேசினாலும் எகிறிப் பேசுறான் பாய்" , "எனக்கு மைக் மோகனத் தவிர வேறு யாரும் தெரியாது ...." எனும் நக்கல் நையாண்டி டயலாக் ஆனாலும் ,"இந்த தொழில்ல இதெல்லாம் ஒண்ணுமில்லே ... 8 பேரு போவான், 5 பேரு வருவான் ..... " என தாதாயிஸத்தை சர்வ சாதாரணமாக புரியவைக்க முயலும் டயலாக் ஆகட்டும் , "ஒரு தப்பு எதையுமே சரி பண்ணாது. மேலும் , மேலும் தப்புதான் பண்ணும் ." எனும் தத்துவவித்துவ பன்ச் ஆகட்டும் , சகலத்திலும் தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர். பாராட்டுக்கள்! 

மேலும் , ஒரு சில இடங்களில் ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய லாஜிக் மிஸ்டேக்குகள் தெரிந்தாலும், தனது , வித்தியாசமும் , விறுவிறுப்புமான காட்சிகளிலும் , படத்தோடு இழையோடும் காமெடிகளிலும் தனி கவனம் செலுத்தி மிரட்டி யிருக்கிறார் டைரக்டர் நெல்சன் ... என்றால் மிகையல்ல! 

 மொத்தத்தில் ., "கோலமாவு கோகிலா'- 'நயன்தாராவின் பட லிஸ்ட்டில் பெரிய கோபுரமுல்ல..!" 

Comments

Popular posts from this blog

Maaran

Even as early as about five minutes into Maaran, it’s hard to care. The craft seems to belong in a bad TV serial, and the dialogues and performances don't help either. During these opening minutes, you get journalist Sathyamoorthy (Ramki) rambling on about publishing the ‘truth’, while it gets established that his wife is pregnant and ready to deliver ANY SECOND. A pregnant wife on the cusp of delivery in our 'commercial' cinema means that the bad men with sickles are in the vicinity and ready to pounce. Sometimes, it almost feels like they wait around for women to get pregnant, so they can strike. When the expected happens—as it does throughout this cliché-ridden film—you feel no shock. The real shock is when you realise that the director credits belong to the filmmaker who gave us Dhuruvangal Pathinaaru, that the film stars Dhanush, from whom we have come to expect better, much better. Director: Karthick Naren Cast: Dhanush, Malavika Mohanan, Ameer, Samuthirakani Stre...

Android Kunjappan Version 5.25

  A   buffalo on a rampage ,   teenaged human beings   and a robot in addition, of course, to adult humans – these have been the protagonists of Malayalam films in 2019 so far. Not that serious Indian cinephiles are unaware of this, but if anyone does ask, here is proof that this is a time of experimentation for one of India’s most respected film industries. Writer-director Ratheesh Balakrishnan Poduval’s contribution to what has been a magnificent year for Malayalam cinema so far is  Android Kunjappan Version 5.25 , a darling film about a mechanical engineer struggling to take care of his grouchy ageing father while also building a career for himself.Subrahmanian, played by Soubin Shahir, dearly loves his exasperating Dad. Over the years he has quit several big-city jobs, at each instance to return to his village in Kerala because good care-givers are hard to come by and even the halfway decent ones find this rigid old man intolerable. Bhaskaran Poduval (Suraj ...

Kuthiraivaal

  Kuthiraivaal Movie Review:  Manoj Leonel Jahson and Shyam Sunder’s directorial debut Kuthiraivaal brims with colours and striking imagery. This is apparent as early as its first scene, where its protagonist Saravanan alias Freud squirms in his bed, suspecting a bad omen. As some light fills his aesthetic apartment wrapped with vintage wall colours, his discomfort finally makes sense—for he has woken up with a horse’s tail! The scene is set up incredibly, leaving us excited for what is to come. But is the film as magical as the spectacle it presents on screen? Kuthiraivaal revolves around Saravanan (played by a brilliant Kalaiyarasan) and his quest to find out why he suddenly wakes up with a horse’s tail, and on the way, his existence in life. Saravanan’s universe is filled with colourful characters, almost magical yet just real enough—be it his whimsical neighbour Babu (Chetan), who speaks about his love for his dog and loneliness in the same breath, or the corner-side cigar...