Filmmaker Radha Mohan’s 60 Vayadhu Maaniram, starring Prakash Raj and Vikram Prabhu, is a film about a missing man at the surface level. But, what it really talks about is how the current generation, which forms the country’s young workforce, has lost all sense of decency because they pursue economic success over the need to care for the elderly in the society.
60 Vayadhu Maaniram is a film that is right up filmmaker Radha Mohan’s alley and he doesn't wait to throw the kitchen sink at us. This, too, is a poignant tale bubbling with substantial moral and ethical tension that most working people experience: Shiva, played by Vikram Prabhu, is a young aspiring software engineer, son of Govindaraj (Prakash Raj), a retired professor, who has been diagnosed with Alzheimer’s. In search of a better opportunity, he has to migrate to Mumbai. So, he takes a tough call to leave his father at a care home that looks after people with Alzheimer’s.
And, on one day out with his father, Govindharaj goes missing and the film is about how Shiva finds him along with Archana, a doctor who was taking care of his father. What does he find? That's the point of the film.
However, the narrative is, one can argue, unfairly stacked against Shiva. It almost paints youngsters, who are unable to personally care for their parents as they battle growing economic insecurities and societal disturbances for their survival, as those with no sense of ethics or morality. The narrative doesn't record, anywhere, that the workforce today have to manage increasing health care costs, inflation and other economic vagaries that the new economy throws up.
At various points the film implies this: look at how the son has left his ailing father in a care home and pursuing his professional ambition elsewhere. What a cruel generation we have become!
In one scene, Shiva himself confronts someone, son of a patient also diagnosed with Alzheimer’s, for leaving his father and going about his otherwise happy life with his family. The film’s underlying point may definitely strike a chord to those who see a moral degradation than the economic problems that confronts us.
Around the world, older people are left to fend for themselves alone while younger people work longer and longer hours to make their ends meet. It is a film about a father, who is fast losing his memories and a son, who has lost his father to Alzheimer’s. And, it speaks to an audience, which has, apparently, lost its values.
°அல்சைமர் " - மறதி நோயால் காணாமல் போகும் அப்பாவுக்கும் , படித்து முடித்து , மும்பை யில் பார்க்கும் வேலையை உதறி , அமெரிக்காவுக்கு வேலைக்கு போக இருக்கும் மகனின் தேடலும் தான் "60 வயது மாநிறம்" படத்தின் கரு மொத்தமும்.
கதை :சிவா-விக்ரம் பிரபுவின் அப்பா கோவிந்தராஜ் -
சில வருடங்கள் கழித்து மும்பையில் இருந்து அமெரிக்கா போவதற்கு முன் சென்னை வரும் விக்ரம் ., அப்பா பிரகாஷ்ராஜை பார்த்து விட்டு செல்ல வந்த இடத்தில் ,அப்பாவுடன் ஷாப்பிங் சென்று அந்த ஹெல்த்கேர் விடுதி திரும்பியதும் அப்பா பிரகாஷ்ராஜ் காணாமல் போக ., அவரைத் தேட விக்ரம் பிரபு ., ஹெல்த்கேர் டேக்கர் ஹோம் டாக்டர் அர்ச்சனா - இந்துஜாவுடன் களம் இறங்கி ஒரு பக்கம் காதலிலும் , மற்றொரு பக்கம் அப்பாவின் தேடலிலும் தவிக்கிறார்.
இது தவிர்த்து ., இன்னொரு பக்கம் காணாமல் போன விக்ரமின் அப்பா பிரகாஷ்ராஜ் ., முதலாளி, விசுவாசத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ., சிக்கலில் இருக்கும்
கலைப்புலி எஸ்.தாணு வழங்க "இசைஞானி "இளையராஜா இசையில் , ராதாமோகனின் திரைக்கதை இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் ,விக்ரம் பிரபு , சமுத்திரகனி, புதுமுகம் இந்துஜா , குமாரவேல் , மதுமிதா உள்ளிட்டோர் நடிக்க ., வெளி வந்திருக்கும் "60 வயது மாநிறம்" படத்தில் , °அல்சைமர் " - மறதி நோயால் காணாமல் போகும் அப்பாவுக்கும் , அமெரிக்காவுக்கு வேலைக்கு போக இருக்கும் மகனின் தேடலையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் , சமுத்திரகனிபின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதமும் சூப்பர்.பா .
சிவா-விக்ரம் பிரபுவின் அப்பா ஒய்வு பெற்ற பேராசிரியர் கோவிந்தராஜாக பிரகாஷ்ராஜ் . கேன்சர் நோய்க்கு மனைவியை பறிகொடுத்து விட்டு மெல்ல மெல்ல °அல்சைமர் " - ஞாபக மறதி நோய்க்கு உள்ளாகும் கேரக்டரில் நம் அப்பா -தாத்தாக்களை எல்லாம் ஞாபகப்படுத்தி தியேட்டர் இருக்கையோடு ரசிகர்களை கட்டிப்போடும் கேரக்பரில் மிரட்டியிருக்கிறார் மிரட்டி.
குறிப்பாக ., தனக்கு ஞாபக மறதி நோய் வந்து விட்டது என்பதை உணரும் பிரகாஷ் ராஜ் ., தான் தன்னையே மறந்து விட்டால் தான் யார் ? என்பதை தெரிந்து கொள்ள பேசி வைக்கும் செல்போன் வீடியோ பதிவில் நம் கண் களை குளமாக்கிவிடும் அளவிற்கு நடித்திருக்கும் நடிப்பு .... அப்பப்பா இதெல்லாம் அவரால் மட்டும் தான் சாத்தியம் .
அதே போன்று ., குமாரவேலின் குழந்தைக்கு , வெள்ளை நாய் கருப்பு நாய் என கதை சொல்ல முயன்று , எந்த நாய் ஜெயிக்கும் ? என சொல்ல மறக்கும் பிரகாஷ்ராஜ் ., ரிட்டயர்டு ஆகியும் ஷூ தேடி ."காலேஜுக்கு போக ணும், சிவாவை ட்ராப் பண்ணனும் ... "என்று புலம்பியபடி , கேன்சரில் மனைவி செத்து 4 வருடம் ஆனது மறந்து .,மகனையே நீங்க யாரு என கேட்கும் அப்பாவாக ஒய்வு பெற்ற கல்லூரி பேராசிரியராக , மறதி நோயால் தவிக்கும் கோவிந்தராஜ் ஆக, பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்.
மறதி நோயால் பாதிக்கப்பட்ட அப்பா பிரகாஷ்ராஜை தொலைத்து விட்டு தேடும் மகன் சிவாவாக இளையதிலகம் பிரபுவின் மகன் -விக்ரம் பிரபு., நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் எனும் பெயரை இந்தப் படத்தில் முழுதாக காப்பாற்றியிருக்கிறார். பலே , பலே!
அதிலும் ., "எல்லார் மாதிரி யும் எனக்கு 300 கிராம் இதயம் ஆனா , அதுல ,500 கிராம் பிரச்சினை .... நான் என்ன பாவம் பண்ணினேன்? நீ டாக்டர் நிறைய டெட் பாடி பார்த்திருப்ப .... ஆனா , ரோட்ல அடிபட்டு அநாதையாக செத்தவன் எல்லாம் என் அப்பா வான்னா கூப்பிட்டு கேட்பது .... எனக்கு ரொம்ப கொடுமையா இருக்கு ..... எனகாதலியிடம் புலம்பும் இடங்களிலும் அவரிடமே ஆரம்பத்தில் ., நீங்க காணாமல் போன ஒருத்தரை தேடறீங்்க நான் தொலைத்த ஒருத்தரை தேடுறேன் ....." என் பொங்கும் இடத்திலும் வசீகரிக்கிறார். அதே மாதிரி , தன் அப்பா மாதிரியான ஹெல்த்கேர் பெரியவரிடம் "இந்த கம்பியூட்டர் , சாப்ட்வேர் இதெல்லாம் படிச்ச அளவு ., நாங்க ,மனுஷங்களை படிக்கலையே ... உங்கள மாதிரி அளுங்களை பார்க்கும் போது தான் வாழ்க்கையில நம்பிக்கையே வருது. என உருகும் இடத்திலும் செம்'ம விக்ரம் பிரபு!
முதலாளி, விசுவாசத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ., சிக்கலில் இருக்கும் சமுத்திரகனி .,பிரகாஷ்ராஜ், குமாரவேல் , மதுமிதா உள்ளிட்டவர்களை முதலாளி உத்தரவிட்டும் கொல்ல முடியாமல் தவிக்கும் இடங்களில் செமயாய் ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் , சமுத்திரகனி "தம்பி, எவ்ளோவோ ட்ரை பண்ணிப் பார்த்தேன் ... கருப்பு நாயை விரட்ட முடியலை .... அதான் கொலை பண்ணிட்டேன்.. ." என்றும் , "இந்த 3 நாள் ஒரு குடும்பத்தோடு தங்கி இருந்தப்போ தான்டா தெரிந்தது நாம கொல்றது ஒரு தனி மனுஷனை இல்ல ., சிலகுடும்பங்களைங்கறது. ... " என்றும் உருகும் இடங்களில் அவர் ஒரு கொலையாளி என்பதையும் தாண்டி ரசிகனன ஈர்க்கிறார்.
புதுமுக அறிமுகம் இந்துஜா , கேர் டேக்கர் .ஹோம் டாக்டர் அர்ச்சனாவாக பிரகாஷ்ராஜைத் தேட விக்ரம் பிரபுவுடன் களம் இறங்கி அவர் மீது காதலிலும் விழும் பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார்.
சமுத்திரகனி பிரகாஷ்ராஜுக்கு வேறு வழியில்லாமல்அடைக்கலம் கொடுக்கும் குமாரவேல் , மதுமிதா ஜோடியும் தங்கள் காமெடி சென்ஸால் சென்டிமெண்ட் படத்தை ஜனரஞ்சமாகவும் தூக்கி நிறுத்திட பெரிதும் உதவி இருக்கின்றனர் .
அதிலும் ., கனி இறந்த செய்தியை பேப்பரில் படித்து விட்டு ., "கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருப்பாருன்னு நினைச்சேன் .. இப்படி போய்சேர்ந்துட்டாரே ... " எனும் மதுமிதாவிடம்., "இரண்டும் ஒன்னு தான்..." எனும் குமாரவேல் செம தமாசு .
பொல்லாத போலீஸ் பாத்ரெட்டி , பிரகாஷ்ராஜின் நண்பர் பாலு வாக வரும் மோகன்ராம் சமுத்திரகனியின் கையாள் காசி , காசியின் ஆள் 'கம்' கனியின் முதலாளி வீட்டு வேலை ஆள் , காமெடி இன்ஸ் 'தங்கதுரை , .... ஆகியோரும் படத்திற்கு பலம் .
"இரண்டு பேரில் யராவது ஒருத்தர் உண்மையா காதலிச்சா கல்யாணம் நடந்துடும். 2 பேரும் காதலிச்சா சண்டை தான் வரும் ... ", "தினம் நான் தூங்கும் போது தலையணைக்கு கீழ கத்தி வச்சுட்டு தூங்குவேன் இந்த நாலுநாள் தலையாணையே இல்லாமல் நிம்மதியா தூங்கி இருக்கேன ..", என்பன உள்ளிட்ட விஜியின் யதார்த்தமான உயிர்ப்புமிக்க வசனவரிகள் படத்திற்கு பெரும் பலம்!
கே ,கதிர் கலை இயக்கத்திலும் , டி.எஸ். ஜெய்யின் படத்தொகுப்பிலும் பெரிதாக குறையேதுமில்லை .
எம்.எஸ் .விவேக் ஒளிப்பதிவில் இந்தப் படம் மேலும் மிளிர்கிறது .
"இசைஞானி "இளையராஜா இசையில் , பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி ., இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறதென்றால் மிகையல்ல!
பிரகாஷ்ராஜ் , இயக்குனர் ராதாமோகன் , தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. மற்றும் "இந்த நாட்டுல கலர் வச்சி என்ன ஜாதின்னு கண்டுபிடிக்கிறாங்கணணே ... என்பது உள்ளிட்ட நச் - டச் வசனங்கள் பெரும் பலம் .
அப்படி பெரிதாக எதுவுமில்லை.
இயககம் : ராதாமோகன் ., தன் திரைக்கதை , இயக்கத்தில் ., அப்பாவின் காதலில் மகன் காதலையும் கவிநயம் , கலை நயத்தோடு இணைத்து கதை சொல்லியிருக்கும் விதம் ., விக்ரம் பிரபு .அப்பாவை தொலைச்சிட்டு அவரை தேடும் போது , தன் ஆம்படையாளை கண்டுபிடிக்கும் இடம்... படிப்படியாக பிரகாஷ்ராஜுக்கு வரும் °அல்சைமர் " - ஞாபக மறதி நோய் உள்ளிட்ட காட்சிகளை படமாக்கியிருக்கும் விதத்திலும் பிரகாஷ்ராஜ் போர்ஷனையும் ., சமுத்திரகனி போர்ஷனையும் இணைத்திருக்கும் விதத்திலும் தான் ,"அழகிய தீயே " , "மொழி", "அபியும் நானும் " உள்ளிட்ட வித்தியாச படங்களை இயக்கிய அனுபவ இயக்குனர் என்பதை நிருபித்திருக்கிறார்.
மற்றபடி ., அந்த நேர்மையான அரசு அதிகாரியை கொல்ல., குட்டியானையில் கடத்தும் சமுத்திரகனியிடம் அந்த அதிகாரி வேணாம் சார் வேணாம் சார்... சார் , சார் என கெஞ்சுவது ... (யாருடா நீங்க ? எதுக்கு என்னை கடத்துறீங்க ? என்றல்லவா அவர் குரல் இருந்திருக்க வேண்டும் .?!) உள்ளிட்ட காட்சிகள் லாஜிக்காக இடிக்கின்ற காட்சி என்பது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் .,
"இவரு ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு எஸ்கேப் ஆகி இருந்தா எப்படியாவது தேடி கண்டு பிடிச்சுடுவாங்க , அதே இவரு ... யாருக்காவது கடன் கொடுத்துட்டு காணாமல் போயிருந்தா ., போகட்டும் விடுன்னு நிம்மதியா இருப்பாங்க ...." , " இங்க பாருங்க அரவிந்தசாமி போட்டவைத் தவிர வேறு எல்லா சாமி போட்டோவும் இருக்கு சார் ..." உள்ளிட்ட குபீர் சிரிப்பு காமெடிகள் மூலம் அந்த குறைகள் தெரியாமல் இயக்குனரும் , இப்படமும் ஜெயித்திருக்கிறது .... என்பதே நிஜம்.
"60 வயது மாநிறம்' - 'வயதான அப்பாக்களை அழைத்துப் போய் மகன்களும் , இளம் மகன்களை அழைத்துப் போய் அப்பாக்களும் பார்க்க வேண்டிய நல்ல பாடம்! கூடவே, நல்ல படம் !"

Comments
Post a Comment