The premise of Gurkha was very much revealed in the movie's promotional videos - a Gurkha who sets out to rescue a group of people who are trapped by a few dreaded extremists for ransom. Billed as an entertainer, the film has its moments, thanks to Yogi Babu's one-liners, some of which are thoroughly enjoyable. As Bahadur Singh, a security who hails from the Gurkha community, the actor is the prime saving grace of the film. Giving him company is Charlie, in the role of another security, who has also delivered a decent performance.
There are some scenes which are far from reality, but the movie's genre allows the liberty and manage to convince the viewers. The plot becomes a little stretched after a point, but some of the antics by Yogi Babu and the performance of Anandraj, Manobala, etc, keep the momentum going. A hardly engaging first half followed by some hilarious scenes in the latter half is likely to work for the target audience. What doesn't work in favor of the film till the interval point is the time the script takes to reach the main conflict. The film belongs to the leave-your-brain-at-home category, and may appeal to those who don't mind logical issues and predictability.
யோகிபாபு கூர்க் இன ஃபேமிலியில் பிறந்த கலப்புக்குழந்தை. கூர்க்காவை யாரும் மதிப்பதில்லை என்பதால் போளிஸாக முயல்கிறார். ஆனால் போலீஸ் டிரெய்னிங்கில் தோற்றதால், கூர்காவாகும் நிலமை. இங்கிலாந்து தூதரக அதிகாரியை காதலிக்கிறார். அவரை கடத்த திட்டமிடும் கும்பல் அவரை ஒரு மாலுக்கு படம் பார்க்க வரவைத்து மாலை தங்கள் கண்ட்ரோலில் கொண்டு வருகிறது.போலீஸால் நெருங்க முடியாத தீவிரவாதிகளை மாலுக்குள் காவலுக்கு இருக்கும் யோகிபாபுவும் சார்லியும் எப்படி முறியடிக்கிறாரகள் என்பது தான் கதை.
யோகி பாபுவுக்கு கதாநாயகனாக இரண்டாவது படம். கண்ணுக்கு குளோசப் வைக்கும் ரஜினி கால பில்டப்புடன் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் பஞ்சத்தில் இவர் ஹீரோவாக இன்னும் எத்தனை படங்கள் வரப்போகிறது என்பது தெரியவில்லை. தர்மபிரபு எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால் இந்தப்படம் கொஞ்சம் தேறியிருக்கிறது. தீவிரவாதிகளை முறியடிக்கும் குண்டான காவலாளி அட்டகாசமான் ஐடியா. ( எங்கிருந்து சுட்டதென கடைசியில் சொல்கிறேன் ) ஆனால் லாஜிக்கே இல்லாத திரைக்கதைதான் படுத்துகிறது. படத்தில் சிரிக்க நிறைய இடங்கள் இருக்கிறது.
வகை தொகையில்லாமல் எல்லோரையும் கலாய்கிறார்கள். ரஜினி,கமல்,ஓபிஎஸ், விஜய் அஜித் என ஒருத்தரையும் விடவில்லை. வசனங்கள் தான படத்தை பல இடங்களில் காப்பாற்றுகிறது. யோகிபாபு கிடைக்கும் சந்துகளிலெல்லாம் சிக்சர் அடிக்கிறார். சார்லியை உனக்கு செண்டிமெண்ட் வரும்னு தெரியும் என சொல்வதும், ஆனந்தராஜை பட்டர் பன் கேட்டு அழ விடுவதும்,என காலய்த்து தள்ளுகிறார். படத்தை காமெடியாக தருவதா? இல்லை திரில்லராக தருவதா எனும் குழப்பம் மொத்த டீமிடமும் இருந்திருக்கிறது. அதனால் படம் இரண்டுங்கெட்டானாக வந்திருக்கிறது.
என்ன தான் கதை காமெடியாக சொன்னாலும் கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா? பொலீஸே நுழைய முடியாத கட்டிடத்திற்குள் இறுதியில் பாட்டி தலைமையில் ஒரு பட்டாளமே நுழைவது எப்படி? இப்படி படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கேள்விகள் முளைத்து கொண்டே இருக்கிறது. படம் பார்க்கும் போது கேள்வி தோன்றக்கூடாது அது தான் கமர்ஷியல் படத்தின் மேஜிக் ஆனால் இந்தப்படத்தில் படம் முழுதும் நமக்கு சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கிறது. மிக சீரியஸாக தீவிரவாதியை என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்ப்பில் இருக்கும்போது
பஞ்ச் காமெடியும், கலாய்ப்பும் போதுமென நினைத்திருக்கிறார்கள்.அது அங்கங்கே புன்னகையை வரவைக்கிறது. ஆனால் ஆனால் அது அங்கங்கே மட்டும் தான். மொத்தப் படமாக கூர்கா முழுமை பெற வில்லை. யோகி பாபு தவிர அனைவரும் காமெடி பீஸாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். சார்லி ஆனந்த் ராஜ் கொஞ்சம் கவர்கிறார்கள் அந்த அமெரிக்க ஹிரோயி அழகு.
சாம் ஆன்டன் நான்காவது திரைப்படம் ஒவ்வொரு படத்திலும் சிறிது முன்னேற்றம் இருந்தது. இந்தப்படத்திலும் ஆரம்பம் அபாரமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு சறுக்கல் தொடங்கிவிட்டது. வரவர பல படங்கள் யூடியூப் கலாய்ப்பு கண்டனங்கள் போலவே இருக்கிறது. இன்ஸ்டண்ட் சிரிப்பு தரும். ஆனால் படமாக எந்த அனுபவத்தையும் தரவில்லை.
தொழில்நுட்பக்குழு அபாரமாக உழைத்திருக்கிறார்கள். நகரின் நடுவே ஷாப்பிங் மால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ஹாலிவுட் படம் போல் இருக்கிறது. இசை படத்தின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. கூர்கா பாதி சிரிப்பு.
Gurkha
ReplyDelete
DeleteVelmurugan
Gusta
ReplyDeleteIt was very nice and wonderful movie
DeleteVickram
ReplyDelete