Azhiyatha Kolangal2 Synopsis: The lives of a popular writer and his ex-lover get affected when they meet after several years
Azhiyatha Kolangal2 Review: Balu Mahendra's debut directorial film in Tamil, Azhiyatha Kolangal, was a trendsetter when it was released four decades ago. As a tribute to the veteran filmmaker, director MR Bharathi made Azhiyatha Kolangal 2, the shooting of which was completed several years ago. The movie, the story of which unfolds between three characters, Gowri Shankar, Mohana and Sita, have been played by Prakash Raj, Archana and Revathy respectively.
Gowri, a celebrated writer, who cherishes the moments he had with Mohana, her college friend, sets out to meet her after almost 25 years. The delighted duo happily engages in a long conversation after which an unexpected incident turns their life topsy-turvy. What happens further is supposed to be a series of intriguing events, but ends up with an unappealing sequence which is artificially staged, thus testing the viewers' patience. The only saving grace of the film is the performance of the lead characters. A lion's share of the film is shot indoors - the lack of novelty in visuals coupled with overdramatic dialogues and scenes spoil the plot.
சென்னை : இயக்குனர் பாலு மஹேந்திரா இயக்கத்தில் 1979ல் உருவான படம்
தான் அழியாத கோலங்கள் ,தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகமான அழியாத கோலங்கள்2
படம் வெளியாகி உள்ளது .இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், அர்ச்சனா ,ரேவதி
,நாஸர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.இந்த படத்தை
மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ளார்.
பாலு மஹேந்திராவின் அழியாத கோலங்கள் ,1979ல் வெளியான இந்த படத்தில் பிரதாப்
.கே.போதன் மற்றும் ஷோபா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்
.இந்த படத்தின் கதை ,கௌரி சங்கர் என்பவர் சென்னையில் பணியாற்றி
கொண்டிருப்பார் ,அவருக்கு அவரது நண்பர் பட்டாபியிடம் இருந்து தந்தி வரும்
பின் படம் பிளாஸ் பேக்கில் செல்லும் ,கதாநாயகனான கௌரி சங்கர்,நண்பர்கள்
பட்டாபி மற்றும் ரகுபதி கிராமத்தில் வளர்ந்து வருவார்கள் ,அவர்கள்
மூவருக்கும் அந்த ஊரில் ஆசிரையையாக பணியாற்றும் இந்துமதியின் மேல் காதல்
கொள்வார்கள்,இந்துமதியை கவர இவர்கள் செய்யும் செயல்கள் என படக்கதை நகரும்
,அந்த சமயத்தில் ஏற்படும் ஓர் பிரச்சனையால் கௌரி சங்கரின் நண்பன் ரகுபதி
இறந்து விடுவான் .
இந்த படம் முழுக்க முழுக்க உறவுகள் உள்ளிருக்கும் அன்பு
,காதல்,பாசம்,நேசம் மற்றும் அதனுல் ஏற்படும் பிரச்சினை அதனால் ஏற்படும்
விளைவுகள் என கதை எதார்த்தமான சூழ்நிலையிலே பயணிக்கும் .இதே போல் தற்போது
உருவாகி உள்ள அழியாத கோலங்கள்2 படத்திலும் உறவுகளுக்குள் ஏற்படும்
பிரச்சனைகளை மைய்யமாக கொண்டே கதை உருவாக்க பட்டிருக்கிறது. ஆனால்
பாலுமகேந்திரா எடுத்த படத்திற்கும் இந்த படத்திற்கும் டைட்டில் மட்டுமே
ஒற்றுமை . கதை வெவ்வேறு
மனித உறவுகளின் உன்னதத்தை சொன்னதில் இரண்டு படங்களுமே சபாஷ் போட வேண்டிய
படங்கள்.
அழியாத கோலங்கள் 2 கதை என்னவென்றால் பிரகாஷ் ராஜ் ஒரு பெரிய
கதாசிரியராக இருக்கிறார் ,இவர் எழுதும் ஒரு நாவலுக்கு சாகித்ய அகடாமி
விருது கிடைக்கிறது,அவர் எழுதிய அந்த கதை உருவாக காரணமாக இருந்த தனது பாலிய
ஸ்நேகிதியை சந்திக்க செல்கிறார் பிராகாஷ் ராஜ் ,அவரின் ஸ்நேகிதிதான்
அர்ச்சனா ,இவர்களுக்குள் வயதாகியும் இருக்கும் காதல் மற்றும் இந்த
சமயங்களில் குடும்ப உறவுகளை கருத்தில் கொண்டு இவர்கள் செயல்படும் விதம்
,இவர்கள் இருவரும் சந்தித்ததால் ஏற்படும் பிரச்சினை என --
படம் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை மிக அழகாக சொல்லி இருக்கிறது .
படத்தில் நடித்த அத்தனை பேரும் நடிப்பு சூறாவளிகள் . ஒவ்வொருவரும்
தனித்துவமாக தங்களது பாத்திரத்தை உணர்ந்து செயல் பட்டு இருக்கிறார்கள்.
உண்மை கதாபாத்திரங்களாக நம்மை உருக்குகிறார்கள். இப்படி பட்ட படங்கள்
பொறுமையாக பார்க்க வேண்டும். காட்சிகள் மெதுவாக செல்வது தான் பலவீனம் என்று
நிறைய பேர் கிசுகிசுத்தாலும் எதார்த்தமான படைப்புக்களை மென்மையாக வழங்க
வேண்டும் என்பதில் இயக்குனர் மிகவும் தெளிவாக இருந்திருக்கிறார்.
இன்றைய நவீன உலகத்தில் வாசிக்கும் பழக்கமும் , டைரி எழுதும் பழக்கமும்
நிறைய பேர் இடம் கிடையாது. மிக மிக குறைத்து விட்டது . அனைத்தும் கணினி
மயம் ஆகிவிட்ட பரபரப்பு வாழ்க்கை முறையாக மாறிவிட்டது.
எது மாறினாலும் காதல் மட்டும் எந்த காலத்திலும் மாறாதது . பழைய நினைவுகளை
நினைத்து பார்த்து புரட்டி போடுகிற பழக்கம் நிறைய பேர் இடம் இருந்து கொண்டு
தான் இருக்கிறது. ரீவைண்ட் செய்யும் ரீவைண்ட் ராஜாக்களும் ராணிகளும்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அர்ச்சனாவின் கண்கள் இந்த படத்தில் இன்னமும் காதல் பேசுகிறது. ரேவதி
அவர்களின் கதாபாத்திரம் ஒரு உன்னதமான மனைவியை உண்மையான பாசத்தை
பிரதிபலிக்கிறது . எத்தனையோ கமெற்சியல் படங்களில் வரும் அம்மா
கதாபாத்திரங்களும் , மனைவி கதாபாத்திரங்களும் பார்த்து பார்த்து நாம் அது
தான் உண்மை என்று பழகி விட்டாலும், எதார்த்த வாழ்வின் மென்மையான
உணர்ச்சிபூர்வமான பெண்களை தமிழ் சினிமா மறந்து விட்டது. நீண்ட நாட்களுக்கு
பிறகு நம்மை ரியாலிட்டிக்கு அழைத்து செல்கிறார் இயக்குனர்.
மனதை நெகிழ வைக்கும் பல காட்சிகள் தியேட்டர் விட்டு நாம் வெளியே வந்த பின்
மனதை பாதிக்கும் . அரவிந்த் இசையில் தேவையான அளவு மௌனமும் கதைக்கு தேவையான
ஸ்வரங்களும் அழகு. இயக்குனர் மனதை நன்கு புரிந்த எடிட்டர் காசி விஸ்வநாதன்
நேர்த்தியாக காட்சிகலை கட்டமைத்திருக்கிறார்.
படத்தில் வரும் அத்தனை பெண்களுமே நல்லவர்களாக இருப்பது இந்த
படத்திற்கு மிக பெரிய பலம். பாசிட்டிவிட்டியை மிகவும் அழத்தமாக சொல்லும்
பெண்கள். இன்றைய சீரியல் பெண்கள் செய்யும் அலப்பறைகள் நடுவே இப்படி பட்ட
பெண்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி. திரைக்கதை சென்ற விதம் அதனுடைய ஸ்பீட்
மட்டுமே கொஞ்சம் பலகீனம் . கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இயக்குனரை
இளைஞர்கள் மிகவும் பாராட்டி இருப்பார்கள்.
இக்காலகட்ட சூழ்நிலைக்கு ஏற்ற தொழிநுட்ப வேலைகள் படத்தில் இல்லையென்றாலும்
,படத்தின் கதையும் அந்த கதையில் ஒன்றி நடித்த நடிகர்களின் நடிப்பும் நம்மை
வெகுவாக கவர்ந்து விடுகிறது ,தற்போது சூழ்நிலையில் உறவுகள் சம்மபந்த பட்ட
நேர்த்தியான படங்கள் வருவது இல்லை அப்படியொரு படத்தை பார்க்க வேண்டும் என
நினைப்பவர்கள் தாராளமாக அழியாத கோலங்கள் 2 படத்தை பாரக்கலாம்.
Comments
Post a Comment