Pancharaaksharam Movie Synopsis: Five friends playfully read passages of doom from a book that can predict an individual’s future. Can they overcome the tragedies that fate has in store for them and rewrite their destinies?
Pancharaaksharam Movie Review: Pancharaaksharam opens with an animated prelude, set in the 11th century Chola period, about the origins of an accursed book that was written to predict the reader’s future, but had to be kept hidden for all that came of it was doom. And it is this very book that five friends unfortunately pick to play a game. For Dushyanth (Santhosh Prathap), who calls himself a traveller, it spells harm from a Satanic child. For Sameera (Madhu Shalini), an aspiring writer, it predicts escape from a grievous situation – but only temporarily. Aidhan (Gokul), a musician, reads a passage that says his life will be in danger from the very art that he loves. The do-gooder Jeevika (Sana Althaf, whose dubbed voice doesn’t suit her) will come face to face with mankind’s darkest depravity. As for Dharma (Ashwin Jerome), who loves the thrill of speed, he might be in an accident. Can the five friends overcome these tragedies that fate has in store for them and rewrite their destinies?
Pancharaaksharam is the kind of film that surprises by simply by being an engaging watch. Director Balaji Vairamuthu sets up the story with quick character introductions and gets into the plot. The film then picks up pace and dashes to a tightly edited and scored interval stretch. The mishmash of genres – there a elements from horror thrillers, psychological horror, and adventure – actually helps in enhancing the eeriness. And in the second half, the film turns into a Saw-like slasher film and thankfully stops short of being torture porn. The film also feels unique thanks to the concepts it keeps talking about – the power of positive thought, dark web and so on.
But the characters are one-dimensional and it banks on the actors to make us care for them. And the five actors do a decent job, though we don’t get a compelling performance. The film also rushes through the portions where four of these characters go in search of fifth one. They find the villain’s hideout quite easily despite the fact that the clues they have in hand are vague. But Yuva’s interesting frames and KS Sundaramoorthy’s vigorous score propel us past these and keep us glued.
சென்னை : பஞ்சராக்ஷரம் படத்தை பாலாஜி வைரமுத்து கதை எழுதி இயக்கி
இருக்கிறார்.பேரடாக்ஸ் புரடக்ஸன் மற்றும் அபியா மோசஸ் படத்தை தயாரித்து
உள்ளனர் .படத்தில் சந்தோஷ் பிரதாப் ,மது ஷாலினி,சனா அல்தாஃப்,அஸ்வின்
ஜெரோம்,கோகுல் ஆனந்த் மற்றும் சீமோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து
உள்ளனர் ,படத்திற்கு இசை அமைத்து உள்ளார் கே.எஸ்.சுந்தரமூர்த்தி
.படத்திற்கு ஒளிப்பதிவு யுவா செய்துள்ளார் .படத்தொகுப்பு ஆனந்த் ஜெரால்டின்
செய்துள்ளார் .
படத்தின் முக்கிய நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடித்து இருக்கிறார் .இவர்
தமிழ் சினிமாவில் பார்த்தீபனின் கதை ,திரைக்கதை ,வசனம் ,இயக்கம் படத்தின்
மூலம் அறிமுகமானவர் .அதற்கு பின் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரின்
படங்களின் தோல்விகள் இவரை கண்டுகொள்ளாத நிலைக்கு தள்ளியது .அதை தாண்டி
தற்போது பேர் சொல்லும் பல படங்களில் நடித்து வருகிறார் சந்தோஷ்.
சம்மந்தம் இல்லாமல் இனையும் ஐந்து பேர் அவர்களுக்குள் ஒரு நல்ல
ஒற்றுமை ஏற்படுகிறது ,ஐவரும் ஒரு ஜீப் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்
சூற்றும் வழியில் ஒருவருக்கு ஒருவர் இனைந்து கொள்கின்றனர் .நெருக்கமாகிய
பிறகு அவர்கள் ஒரு விளையாட்டை விளையாட திட்ட மிடுகிறார்கள் .அது
என்னவென்றால் ஒரு புத்தகம் கிடைகிறது அது கடந்த காலத்தை வைத்து
எதிர்காலத்தை கணிக்கும் ஒரு புத்தகமாக இருக்கிறது அதனை வைத்து ஒரு விபரீத
விளையாட்டுக்குள் நுழைகிறார்கள்.
அந்த விளையாட்டு பல திடுக்கிடும் சம்பவங்களுக்கு கதையை எடுத்து
செல்கிறது ,அதன்பின் தொடரும் பல விசயங்கள் நம்மை ஆச்சரியம் ஊட்டவைக்கும்
விசயங்களாகவும் அதிசயமான விசயங்களாகவும் இருக்கின்றன . மனிதனின் நம்பிக்கை
எந்த உச்சத்திற்கும் வேண்டுமானலும் எடுத்து செல்லும் அதே நேரத்தில் ஒரு
மனிதனின் கெட்ட சிந்தனைகள் மிக பெரிய ஆபத்தையும் கொண்டு வரும் என்று கதை
எடுத்து கூறுகிறது .
சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் இந்த பஞ்சராக்ஷரம், மனோ ரீதியாக பல
தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. மேக்கிங் விஷயத்தில்
அசத்தி உள்ளார்கள் . ஒட்டு மொத்த டீமுக்கும் பாராட்டுக்கள் .
படத்தில் நடிகர்கள் அனைவரும் நன்கு நடித்து இருந்தனர் ,படத்திற்கு
கொடுக்க பட்டிருந்த பின்னனி இசை படத்தை எந்த இடத்திலும் சுவாரஸ்யம்
குறையாமல் எடுத்து சென்றது .மேலும் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு பலம் என்றே
கூறலாம் .படத்தின் திரைக்கதை இதுவரை நாம் பார்க்காத பல விசயங்களை
மெருகேற்றி காட்டியது .
படத்தின் குறை என்றால் கற்பனைகள் என்று சொல்லபடும் காட்சிகள் தான் .அதில்
சில சமயங்களில் தொய்வு ஏற்பட்டு விடுகிறது .இரண்டாம் பாதியில் பல இடங்கள்
தொய்வுற்றே காண படுகிறது .அதைதான்டி டாவின்சி கோட் படத்தில் வரக்கூடிய
கதாபாத்திரம் போல வரும் கதாபாத்திரம் எல்லாம் நம்மை சில சமயங்களில் விரக்தி
அடையவும் செய்கின்றது. ஆங்கில படமான ஜுமான்ஜி திரைபடத்தில் குழந்தைகள் ஒரு
புத்தகம் வைத்து விளையாடுவார்கள் , அதுபோல் சில காட்சிகள் இருந்தாலும் ,
திரைக்கதையில் நிறைய ஸ்வாரசியங்கள் செய்து உள்ளார் இயக்குனர்.
மொத்ததில் பஞ்சராக்ஷரம் படம் ஒரு நல்ல த்ரில்லர் படம் ,சுவாரஸ்யமான
அடவ்ஞ்சர் படம் என்று கூட சொல்லலாம் ,அதை தாண்டி தொய்வு மிகுந்த காட்சிகள்
இல்லையென்றால் படத்தை இன்னும் கூட நெருங்கி ரசித்து இருக்கலாம் .
2019 ஆம் ஆண்டு பல புதிய இயக்குனர்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மிக
பெரிய வரப்பிரசாதம். பல புதிய முயற்ச்சிகள் செய்து சாதனை படைக்க துடிக்கும்
இளைஞர்கள் , நல்ல படங்களை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் .
பஞ்சராக்ஷரம் கண்டிப்பாக திரில்லர் ரசிகர்களுக்கு வரம்.
Comments
Post a Comment