V1 Murder Case Movie Synopsis: An intelligent forensic officer starts investigating a murder, but he faces a slew of challenges as he suffers from nyctophobia. Will he be able to solve the case?
V1 Murder Case Movie Review: The challenge while writing a whodunit is to maintain the suspense element till the end with zero compromise on logical loopholes. There have been films made in the genre which started off promisingly, but failed to hold the attention as the sequences which unfold in the latter half couldn’t match the initial portions. V1 Murder Case, which features comparatively new faces, is the latest to join the list of such attempts.
The film begins with the murder of a girl who was in a live-in relationship. Quite naturally, the investigation, led by Ram Arun Castro (Agni) and Vishnu Priya (Luna), begins with her partner and another guy who was after her. Agni is a nyctophobiac, and this poses a threat to him during the course of the investigation. There are some realistic scenes like the one where Agni asks his forensic team to come up with their analysis of a crime scene. With some decently written scenes and performances by the lead, the story manages to engage us in the first half.
However, the latter half goes downhill as the logic goes haywire and the plot takes unnecessary diversions. Though some scenes may have looked good on paper, they test our patience and appear irrelevant. The crucial climax scene, where the killer and his reason for murder are established, lacks conviction because of the weak performance.
The two positive aspects of the movie are the absence of songs and the presence of a strong female lead with whom the protagonist doesn’t have any romantic track. Ram Arun and Vishnupriya are apt in their respective roles.
வி 1 இந்த படத்தின் முன்னோட்டத்தில் இருந்தே இந்த படத்தை காண வேண்டும்
என்ற என்னம் நம்மிடையே ஏற்பட்டுவிட்டது .இயக்குனர் வெற்றிமாறன் மற்றும்
பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பவல் நவகீதன் தான் இந்த
படத்தை இயக்கி இருக்கிறார் .
இந்த படத்தில் அருன் கேஸ்ட்ரோ ,விஷ்ணு ப்ரியா ,மைம் கோபி ,லிஜேஸ் மற்றும்
காயத்ரி ஆகியோர் நடித்து இருக்கின்றனர் .ரோனி ரபேல் என்பவர் படத்திற்கு
இசையமைத்து இருக்கிறார் .
படத்தின் பெயரிலேயே கதை ஒளிந்து உள்ளது. ஒரு கொலை வழக்கில் தேடப்படும்
குற்றவாளி யார் என்பதை கண்டறியும் விசாரணையே இந்த கதை.
ஒரு பெண் இரவில் மர்மமாக கொலை செய்யப்படுகிறார், எதற்காக அவர் கொலை
செய்யப்பட்டார் மற்றும் ஏன் அவரை கொலை செய்தனர் , காரணம் என்ன போன்ற பல
கேள்விகளுக்கு விடை கிடைத்ததா இல்லையா என்பதை கடைசி வரை நம்மை சீட் எட்ஜ்ல்
அமர்த்திய ஒரு திரில்லர் கதை தான் வி1.
வி1 படம் ஒரு புலன் விசாரணை படமாகும் . படத்தின் விருவிருப்பு ஆரம்பத்தில்
இருந்து இருதி வரையில் மிக வேகமாய் இறுக்கிறது.முதல் பாதி படு பயங்கரமாக
நாம் எதிர்பாரா பல விசயங்களை எடுத்து கொடுத்து படம் நகர்கிறது .இரண்டாம்
பாதி முதலில் ஆரம்பம் மெதுவாக இருந்தாலும் படம் போக போக சூடு பிடித்து
எதிர்பாரா ஒரு இடத்தில் முடிகிறது .இதுவரை வந்த புலன் விசாரணை படங்களில்
இந்த படமும் முக்கிய இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது, அதற்கு காரணம் இந்த
படத்தில் உள்ள ஒரு க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் .
படத்தை பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு அந்த க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்
தெரிந்து விட்டால் படத்தின் ஸ்வாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் படத்தை
திரையரங்குகளில் சென்று காணுமாறு கேட்டு கொள்ளபடுகிறது .மேலும் இந்த
க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் நம்மை பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் அதே நேரத்தில்
இதுவரை வராத இந்த டிவிஸ்டை கண்டு நம்மை இந்த படம் ஆச்சிரயபடவும் வைக்கும் .
நம் நாட்டில் சமீபத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து இப்படத்தில் ஒரு
சிறு குறிப்பு பேசப்பட்டுள்ளது.
வி1 படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்து
இருந்தார்கள் ,முக்கியமாக கைரேகை நிபுனராக வரக்கூடிய நடிகர் அருன் மிகவும்
அசதி இருந்தார் ,தமிழ் சினிமாவில் கைரேகை நிபுனர் கதாபாத்திரங்கள்
மிககுறைவு அதிலும் அந்த கதாபாத்திரத்திற்கு நிக்டோபோபியா எனும்- தூக்கத்தை
கண்டால் அஞ்சும் நோயும் இருக்கும் என்பெதெல்லாம் உணர்ந்து சரியாக புரிந்து
நடித்து இருக்கிறார் .மேலும் இந்த படத்தில் புலன் விசாரணை நடத்தும் பெண்
போலிஸாக வரும் விஷ்ணு ப்ரியாவும் ஒரு பெண் போலீஸாக அந்த வேடத்தில் நன்கு
நடித்துள்ளார் .குண்டு படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்திய லிஜேஸ்
இந்த படத்திலும் சரியான கதாபாத்திரத்தில் தன் நடிப்பை வெளிபடுத்தி
இருக்கிறார் .
படத்திற்கு மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு மற்றும் படத்தில் வரும்
பின்னணி இசை தான். படத்தை இயக்கிய பாவல் நவகீதன் அவர்களுக்கு இதுதான் முதல்
படம் என்பது குறிப்பிடத்தக்கது.படத்தில் சில இடங்களில் திரைக்கதையில்
தொய்வு ஏற்பட்டுள்ளது அதுவே படத்தின் மிக முக்கிய குறையாக அமைந்தது.
மொத்தத்தில் வி1 கண்டிப்பாக கட்டாயமாக பார்க்க வேண்டிய த்ரில்லர் படங்களில்
ஒன்று ,2019ன் இறுதியில் வந்தாலும் ஒரு முக்கிய படமாக அமைந்து இருக்கிறது
,படத்தில் இருக்கும் சில குறைகளை தவிர்த்து பார்த்தால் படம் மிகவும் நல்ல
படம்தான் . காளிதாஸ் படத்திற்கு அடுத்ததாக வந்திருக்கும் மிக முக்கியமான
க்ரைம் த்ரில்லர் திரைப்பபடம் .
எந்த ஒரு படத்தையும் வேறு ஒரு படத்துடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது
என்று பொதுவாக சொல்லுவார்கள். அப்படி மற்ற படங்களுடன் ஒப்பிட்டு பார்க்க
முடியாத சில வித்யாசமான காட்சிகள் இந்த படத்தில் அமைந்தது இயக்குனருக்கு
கிடைத்த வெற்றி.
இயக்குனர் சொல்லி இருக்கும் கிளைமாக்ஸ் தீர்ப்பு ஆடியன்ஸ் கையில் விட
படுகிறது. ஆடியன்ஸ் தான் இது சரியா , அல்லது தவறா என்ற விவாதத்தில்
தீர்ப்பு சொல்லி இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் .
Comments
Post a Comment